-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இருளும்‌ காரிருளும்‌ உலகினை மூடும் - அகஸ்டின் ஜெபக்குமார் கவிதைகள்

Bro.D.Augastine Jebakumar Kavithaigal Part - 2


இருளும்‌ காரிருளும்‌ உலகினை மூடும்‌ வேளை

இருதயமும்‌ துவளக்‌ கூடுமே பயத்தால்‌

இறகுகளால்‌ உன்னை மூடிப்‌ பாதுகாப்பேன்‌ என்றவரின்‌

இறைவாக்கினை நம்புவோம்‌ நாமே


காக்கப்பட்டால்‌ போதும்‌ என்றல்ல

கர்த்தருக்கு விசேஷித்தவர்களாய்‌ மாறிட

கல்வாரியின்‌ இரத்தத்தினால்‌ உண்டான உடன்படிக்கையில்‌

காக்கப்படிவோம்‌ நாமும்‌ வேகமே


பாளையத்திலும்‌ பரிசுத்தம்‌ பேணிக்‌ காக்க

பானையிலும்‌ பரிசுத்தம்‌ என்ற வேத வாக்கை

பாங்காக கடைப்பிடித்திட என்றும்‌

பார்வையிலும்‌, பழக்கத்திலும்‌ பரிசுத்தம்‌ கானர்பிப்போம்‌


மாய்மாலம்‌ அகற்றி திறந்த புத்தகமாய்

மானிடர்‌ முன்‌ நாமும்‌ வாழ்ந்திட

மாதேவன்‌ கிருபை அளிப்பாரே நிதமும்

மாறா தேவ வாக்குகள்‌ நமக்கு உண்டே


                                                               அன்பரின் அறுவடைப் பணியில் 

                                                  அன்பு  சகோதரர் D. அகஸ்டின் ஜெபக்குமார்


மேற்கோள் :

ஜெம்ஸ் சத்தம் - மாத இதழ் , பிப்ரவரி 2020,பக்கம் : 9

கருத்துரையிடுக

0 கருத்துகள்